லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய IMAX !  டிக்கெட்  விலை  தெரியுமா?

சினிமா என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சினிமா பார்க்காதவர்களே இருக்க மாட்டார்கள் வேலையில் பிசியாக இருந்தாலும் வாரவிடுமுறையில் எப்படியாவது டிவியிலோ அல்லது ஓடிடி தளங்களிலிலோ  பழைய திரைப்படமாக இருந்தாலும் பார்த்து  ரசித்து வாழும்  மனிதர்கள்  தான்  அதிகம்.

அந்த காலத்தில் சினிமா கொட்டகை என ஆரம்பித்து தற்போது மல்டிபிளக்ஸ் வரை நவீனமயமாகி விட்டது. அவ்வாறு இருந்தாலும் சினிமா மீது  பிரியம் கொண்டவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.  டிஜிட்டல் திரையில் அதிரும் சத்தத்தோடு படம் பார்ப்பதற்கு நன்றாக தான் இருக்கிறது. இந்நிலையில் பல நிறுவனங்கள் டிஜிட்டல் திரையில் பிரபலமாகி உள்ளன. அதில் மிக முக்கியமானது IMAX.

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய IMAX  நம்ம கோவையில் தான் தொடங்கப்பட்டுள்ளது .

கோவை விமான நிலையம் அருகே ஒன்பது திரையரங்குகள் கொண்ட பிராட்வே சினிமாஸ் புதிதாக  திறந்து உள்ளது. தற்போது இதில் ஆறு ஸ்க்ரீன்களில் படங்கள் திரையிடப்படுகிறது. ஐமேக்ஸ் லேசர், EPIQ பிரீமியம் மற்றும் கோல்ட் ஸ்கிரீன்கள் ஆகிய மூன்றும் இன்னும் சில பணிகள் காரணமாக திறக்கப்படாமல்  உள்ளது. இதில் கோல்ட் ஸ்க்ரீனில் சாய்வு இருக்கைகளுடன் ஆடம்பர வசதிகள் செய்யப்பட உள்ளது.

கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட IMAX தியேட்டரின் டிக்கெட் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.  இந்த 3 ஸ்கீரின்களின் விலை நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதில் IMAX laser -க்கான டிக்கெட் விலையானது 509 ரூபாயும், கோல்ட்-க்கான டிக்கெட் விலை 445 ரூபாயாகவும், EPIQ-க்கான டிக்கெட் விலை 300 ரூபாயகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சாதாரண ஸ்கீரினின் விலை 190 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.