இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம்

கோவை ஒத்தக்கால்மண்டபம், இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் அண்ட் மெஷின் லெர்னிங் துறை சார்பில் “கைஸர் – 2023” என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்தின் பார்க்லேஸ் வங்கியின் வணிக ஆய்வாளர் ராஜபிரியா மயில்சாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடம் தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் ஜெயா, பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொணடனர்.