
ஐபில் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை சேர்த்தது.
CSK ஓப்பனர் ருதுராஜ் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கான்வே மற்றும் ரஹானே அணிக்கான ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினார். சிவம் துபே, அம்பதி ராயுடு மற்றும் மொயின் அலி அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இறுதியில் தோனி மற்றும் ஜடேஜா பார்ட்னெர்ஷிப் அமைத்தனர்.
12 பந்துகளில் 40 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜாவும், தோனியும் சிக்ஸர்களை தெறிக்க விட்டாலும், சந்தீப் சர்மா சுதாரித்துக் கொண்டு கடினமாக பந்து வீச CSK அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை மட்டும் சேர்த்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்நிலையில் மிடில் ஓவர்களில் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யாமல் விளையாடியது தான் தோல்விக்கு காரணமாக பார்க்கிறேன் என தோனி கூறியுள்ளார். மிடில் ஓவர்களில் சிவம் துபே மற்றும் மொயின் அலி ஆகியோர் தான் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய சிரமப்பட்டனர். தோனி இவர்களை தான் கடுமையாக விமர்சித்துள்ளார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
photo credits: TATAIPL