கோவையில் நாளை மின்தடை

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் மின்துறையின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பழங்கரை, ராக்கியபாளையம், அவிநாசி டவுன், கே.கே.புதூர், சுண்டக்காம்பாளையம், வேட்டுவபாளையம், மடத்துப்பாளையம் மற்றும் கந்தம்பாளையம் ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.