செரீனா வில்லியம்ஸ்: டென்னிஸ் பயணத்திற்கு முடிவு

40 வயதான செரீனா வில்லியம்ஸ் இதுவரை பல்வேறு வீராங்கனைகளை வீழ்த்தி சாதனைகளை படைத்தவர்.

செரீனாவின் அறிவிப்பு

இவர் கடந்த மாதம் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து உள்ள, அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் தான் எனது கடைசி போட்டியாக இருக்கும். இனி வரும் நாட்களை தனது குடும்பத்திற்காக செலவளிக்க விரும்புவதாக கூறினார்.

கடினமாக இருந்தாலும், தற்போது டென்னிஸை விட்டு விலகி தான் ஆக வேண்டும் என சோகத்துடன் கூறியிருந்தார்.

சாதனைகள்

கடந்த 27 ஆண்டுகளாக, டென்னிஸ் உலகில் உள்ள செரீனா வில்லியம்ஸ் 186 வாரங்கள் தொடர்ச்சியாக நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார்.

23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள அவர், ஒலிம்பிக் தொடரில் 4 முறை தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

மேலும் இதுவரை 73 முறை சாம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெற்றார்

இந்நிலையில் கூறியபடி இன்று டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று செரீனா மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோமலஜனோவிக் ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார். போட்டியில் இருந்தும் வெளியேறினார்.

 

 

– பா. கோமதி தேவி