பி.எஸ் .ஜி தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பி.எஸ் .ஜி தொழில்நுட்ப கல்லூரியின் 2022 ஆண்டுக்கான இயந்திரவியல் துறை மற்றும் அது சார்ந்த துறைகளில் பட்டம்  முடித்த மாணவர்களுக்கு இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

4 ஆண்டுகள் பட்டப்படிப்பும் 5 ஆண்டுகள் (Sandwich) பட்டப்படிப்பும் மற்றும் இரண்டு ஆண்டு பட்ட மேற் படிப்பும் வெற்றிகரமாக முடித்து 794 மாணவ மாணவியர் கீழ்கண்ட பிரிவுகளில் முறையே இயந்திரவியல், வாகனவியல், கட்டிடவியல், உயிரி தொழில்நுட்பம், பேஷன் தொழில்நுட்பம், உற்பத்தி துறை, துகிலியல் துறை மற்றும் உலோகவியல் துறைகளில் சான்றிதழ்களை பெற்றனர்.

பி.எஸ் .ஜி கல்லூரி  முதல்வர் பிரகாசன் தலைமையில் துறை தலைவர்கள் மற்றும் தொழில் வல்லுநர் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினார்கள்.

இந்த விழாவின் தலைமை விருந்தினர்   டோயோட்டா கிர்லாஸ்கர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகஆலோசகரக (External Affairs) பரகராமன் கலந்து கொண்டார்.

இவர் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக டி.வி.எஸ் & டோயோட்டா நிறுவனங்களில் பல்வேறு துறைகளில் ஆழமாக தடம் பதித்து வெற்றி நடை முத்திரை பதித்தவர். அவர் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்றவர் அவர்தம் பன்முக திறமை மற்றும் ஆளுமை ஆற்றல் பல்வேறு நாடுகளில் பணியாற்றிய சிறந்த அனுபவ அறிவு ஆகியவற்றால் பல கல்வி நிறுவங்களின் பாட திட்ட உறுப்பினராக சிறப்புடன் பணி புரிந்து வருகிறார்.

சான்றிதழ் வழங்கும் விழா பி.எஸ் .ஜி பொறியியற் கல்லூரியில் பாரம்பரியம் மிக்க அனைத்து முறைகளையும் பின்பற்றி சிறப்புடன் நடைபெற்றது

பட்டம் பெற்ற மாணவ மாணவியர் அனைவரும் தலைமை விருந்தினரின் உரையை கேட்டு அவர் கூறும் கருத்துக்களை உள்வாங்கி பயன் பெறுவதோடு மட்டுமல்லாமல் கல்லூரி முதல்வர் முன்னிலையில்  நின்று நம் நாட்டுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும், ஒற்றுமையுடன் செயல் படுவதாகவும் நாட்டின் இறையாண்மையை காத்து சிறந்த குடிமகனாக செயல் படுவோம் என்று  உறுதி மொழி கொண்டனர்.