சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் ‘குரு பூஜை’

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், உலக மக்களால் ‘யோக குரு’ என்று போற்றப்பட்ட பள்ளியின் நிறுவனர் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் முக்தி நாளான ஆகஸ்ட் 19 அன்று குரு பூஜை நடைபெற்றது.

குரு பூஜையின் ஒரு நிகழ்வாகத் திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது. பள்ளியில் பயில்கின்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளும் ஆசிரியைகளும் திருவிளக்கு வழிபாடு செய்து குருதேவரின் அருளைப் பெற்றனர். இத்திருவிளக்கு வழிபாட்டினைப் பேரூராதீனம், கௌமாரச் செல்வி மரகதம் அம்மையார் நடத்தினார். குருவணக்கப் பாடல்களை மாணவ மாணவியர் பாடினர். குருதேவரின் சிந்தனைகளை வாசித்தனர். நிறைவாக, குருதேவருக்கு மகாதீபாராதனை நடைபெற்றது.

நிகழ்விற்கு பள்ளிச் செயலர் கவிதாசன் தலைமை தாங்கினார். கல்வி ஆலோசகர் கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், ஆசிரியர்கள், மாணவ மாணவியர் மற்றும் பள்ளியிலுள்ள பணியாளர்கள் மற்றும் குடும்பத்தார் அனைவரும் கலந்துகொண்டு குருதேவருக்கு மலர் வழிபாடு செய்தனர்.