காண்போரை கவரும் வகையில் கிருஷ்ணர், இராதை வேடம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் புதன்கிழமையன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில், பள்ளியில் பயில்கின்ற நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவியர் கிருஷ்ணர் மற்றும் இராதை ஒப்பனை செய்து காண்போரைக் கவர்ந்தனர்.  கிருஷ்ணரின் பெருமைகளைப் போற்றும் வகையில் மாணவ மாணவியரின் கண்கவர் நடனம் இடம்பெற்றது. மேலும் கிருஷ்ணர் பாடல்களை மாணவ மாணவியர் பாடி மகிழ்ந்தனர்.

கல்வி ஆலோசகர்  வெ. கணேசன், பள்ளி முதல்வர் இரா. உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சு. சக்திவேல், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் உள்ளிட்டோர் கிருஷ்ண ஜெயந்தி விழா வழிபாட்டில் கலந்து கொண்டனர்.