குழந்தைகளுக்கு செயற்கை கால்கள் வழங்க நிதி திரட்டும் நிகழ்வு

கோவை, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டௌன்டவுன் (Downtown) மற்றும் சேக்புரோ நிறுவனம் சார்பில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு செயற்கை கால்கள் வழங்க நிதி திரட்டும் வகையில், நாம் நடந்து மற்றவர்களையும் நடக்கவைப்போம் என்ற கரும்பொருள் கொண்டு “ரோடோ ரைட் ஆர் ரன்” என்ற நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள ஸ்ரீ ஆர்.கே.ரங்கம்மாள் பள்ளி முன்பு சனிக்கிழமையன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்கும் அனைவரும் பதிவு கட்டணம் 650 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த பதிவு கட்டணம் மூலம் வசூலாகும் தொகையில் செயற்கை கால்கள் தயார்செய்து தேவைப்படுவோருக்கு வழங்கப்படும்.

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் (Downtown) சார்பில் வழங்கப்படும் செயற்கை கால்கள் ஆண்டு தோறும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் 150 கால்கள் வழங்க இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது.

இந்த “ரோடோ ரைட் ஆர் ரன்” நிகழ்வு கோவையில் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் நடைபெற்றது. இது வரை கோவையில் மட்டும் 300 நபர்கள் பதிவு செய்துள்ளனர்.