ஏஐ வசதிகளுடன் கூடிய 14 புதிய  லேப்டாப்கள் ஹெச்பி அறிமுகம்

எங்கிருந்தும் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதை ஏதுவாக்கும் ஏஐ வசதிகளுடன் கூடிய கச்சிதமான மற்றும் ஸ்டைலான என்வீ எக்ஸ் 360 14 வகையின லேப்டாப்களை ஹெச்பி அறிமுகம் செய்துள்ளது. வெறும் 1.4 கி.கி எடைகொண்ட இந்த லேப்டாப்புகள் 14 இன்சு ஓஎல்இடி டச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது, வேலைசெய்தல், எழுதுதல், பார்த்தல் மற்றும் விளையாடுதல் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு டிஸ்பிளேவைச் சரிசெய்துகொள்வதைச் சாத்தியமாக்குகிறது. புதிய என்வீ 14 லேப்டாப்புகள்,  இன்டல் கோர் கோர் அல்ட்ரா பிராசஸர்களைக் கொண்டுள்ள, அதி-நவீன படைப்பாற்றல் பணிகளை அடோப் ஃபோட்டோஷாப் போன்றவற்றில் செய்வதைச் சுலபமாக்குகிறது. மேலும் இந்த லேப்டாப்புகள் ஒரு நியூரல் ப்ராசசிங் யூனிட் கொண்டுள்ளது, பேட்டரியை 65% வரை மேம்படுத்துவத்துவது, குறுக்கீடுகளற்ற படைப்பாற்றலுக்கும் உற்பத்தித்திறனுக்கும் வழிவகுக்கின்றன.

எங்கும் எடுத்துச்செல்லும் தன்மை, பன்முகச் செயல்திறன், எதிர்காலத்தில் தயார்நிலை ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஹெச்பி அதன் புதிய என்வீ எக்ஸ் 360 14 லேப்டாப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழுவதும் அலுமினியத்தால் கட்டமைக்கப்பட்ட உடலமைப்பு ஒரு எக்ஸ் 360 ஹின்ஜைக் கொண்டுள்ளது. இது, ப்ரீமியம் அனுபவத்தையும் எங்கும் கொண்டுசெல்லும் சுதந்திரத்தையும் வழங்குகிறது. கூடுதலாக, இதன் ஏஐ திறன்கள் ஸ்மார்ட் இணை பணிகளையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்துகின்றன. ஹெச்பி என்வீ எக்ஸ் 360 14 லேப்டாப்புகள் மேம்பட்ட வீடியோ அம்சங்களுக்கான விண்டோஸ் ஸ்டுடியோ எஃபெக்ட்ஸ் வசதியைக் கொண்டுள்ளது.

நியூரல் ப்ராசசிங் யூனிட் ஆல் ஏதுவாக்கப்பட்ட விண்டோஸ் ஸ்டுடியோ எஃபெக்ட்ஸ் ஏஐ அடிப்படையிலான வசதிகளைக் கொண்டுள்ளது. இதில், படங்களை நகர்த்தும்போதோ, தானாக ஜும்செய்தல் மற்றும் கிராப் செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.  ஏஐ ஆற்றல்கொண்ட ஆளறிவுணர்திறன் பயனர் எழுந்தவுடன் திரையைத் தானாக ஆஃப் செய்தல், பின்னால் யாரும் நிற்கும்போது மங்கலாக்குதல் ஆகிய திறன்களைக் கொண்டுள்ளது.  புதிய ஹெச்பி என்வீ  எக்ஸ்360 14, ஐமேக்ஸ்

சான்றளிக்கப்பட்ட டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது நுகர்வோருக்கு ஐமேக்ஸ் தரத்திலான ஆழ்ந்த காட்சி, ஆடியோ மற்றும் ப்ரீமியம் டிஜிட்டல் உள்ளடக்க அனுபவத்தை வழங்குகிறது. நிலைத்திருத்தல் மீதான தனது உறுதிப்பாட்டைத் தொடரும் வகையில், ஹெச்பி புதிய என்வீ  எக்ஸ்360 14 லேப்டாப்புகளை 55% மறுசுழற்சி செய்யப்பட்ட உலோகங்களை ஏ கவர், சி கவர், டி கவர் மற்றும் ஹின்ஜ் கோப்புகளில் கொண்டுள்ளது.

ஹெச்பி என்வீ  எக்ஸ்360 14 ஹெச்பி வேர்ல்ட் ஸ்டோர்களிலும் ஹெச்பி ஆன்லைன் ஸ்டோர்களிலும் ரூ.99,999 முதல் துவங்கும் விலைகளில் –மீட்டியார் சில்வர் மற்றும் அட்மாஸ்பெரிக் புளு ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். ஹெச்பி என்வீ  எக்ஸ்360 14 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இலவச கிரியேட்டர்ஸ் ஸ்லிங் பேக் வழங்கப்படும்.