இயற்கையாக மெலடோனின் அதிகரிக்கும் சில குறிப்புகள்!

மனிதர்களுக்கு நல்ல தூக்கம் வேண்டுமானால், உடலில் போதுமான அளவு மெலடோனின் தேவைப்படுகிறது. மெலடோனின் என்பது ஒருவரின் மூளையில் உள்ள  பீனியல் சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் ஒருவகையான ஹார்மோன் ஆகும். இது ஒருவரின் உறக்கத்தை தூண்டுவதற்கு உதவுகிறது. அந்த வகையில், எவ்வித மருத்துவ பயனின்றி இயற்கையாகவே மெலடோனின் அளவை அதிகரிப்பது குறித்து இங்கே காணலாம்.

ஏழு மணி நேர தூக்கம் அவசியம்:

நீங்கள் போதுமான நேரம் தூங்கவில்லை என்றால், அது உங்களின் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சாதாரண மனிதன் இரவில் ஏழு முதல் எட்டு  மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம். அதை தவறினால், அந்நாளில் நீங்கள் சோர்வாக உணருவீர்கள். இது ஒருவரின் மெலடோனின் உற்பத்தியை தடுக்கிறது.

சூரிய ஒளி

காலை நேரங்களில்  குறைந்தது 15 நிமிடங்கள் சூரிய ஒளியைப் பெறுங்கள். இது மெலடோனின் உற்பத்தியை சீராக்கி அதன் அளவைக் குறைத்து பகலில் விழித்திருப்பதை உணரவும் இரவில் நன்றாக தூங்கவும் உதவுகிறது.

மின் சாதனங்களை தவிர்க்கவும்:

மாலையில், குறிப்பாக ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து பிரகாசமான செயற்கை ஒளியின் வெளிச்சத்தை குறைக்கவும். இந்த சாதனங்கள் நீல ஒளியை வெளியிடுகின்றன, இது மெலடோனின் உற்பத்தியை அடக்குகிறது.

வசதியான உறங்கும் சூழல்:

தூக்கத்திற்கு முன் வழக்கமாக ஒரு  அமைதியான சூழலை அமைத்துக் கொள்ளுங்கள், இது ஓய்வெடுக்கும் நேரம் என்பதை உங்கள் உடலுக்கு உணர்த்தி, முற்றிலும் இருண்ட அறையில் தூங்க வேண்டும். இது மெலடோனின் அளவை அதிப்படுத்த உதவுகிறது.

மெக்னீசியம் நிறைந்த உணவுகள்

இரவு நேரங்களில் வெண்ணெய், பாதாம், பூசணி விதைகள் மற்றும் பச்சை இலை காய்கறிகள் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உண்பதால் நமது  மூளையின் செயல்பாட்டை குறைத்து, ஆழ்த்த உறக்கத்திற்கு வழிவகுகிறது.

மன ஆரோக்கியம் :

அதிக மன அழுத்தம் ஒருவரின் மெலடோனின் உற்பத்தியைத் தடுக்கிறது. எனவே, தியானம், நடைப்பயிற்சி அல்லது யோகா போன்ற பயிற்சிகள் செய்து வருவதால், ஒருவரின் மன அழுத்தத்தை குறைத்து, ஆரோக்கியமான தூக்கத்திற்கு உதவுகிறது.