சோனி நிறுவனத்தின் புதிய  பார்ட்டி ஸ்பீக்கர் அறிமுகம் 

சோனி இந்தியா நிறுவனத்தின் எங்கும் சத்தமான கொண்டாட்டத்தை கொண்டாட மக்களுக்கு உதவும் புதிய  எஸ்ஆர்எஸ் – எக்ஸ்வி 500 – ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பீக்கர் சக்திவாய்ந்த ஒலி, உள்ளமைக்குப்பட்ட விளக்குகள் மற்றும் ஒரு நீடித்துழைக்கும் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது, நீங்கள் ஒரு கரோக்கி மைக்கை அதனுடன் இணைத்து இரவு முழுவதும் பாடலாம். எஸ்ஆர்எஸ் – எக்ஸ்வி 500 இல், வலிமையான, சக்தி வாய்ந்த பாஸ் ஐ குறைந்தபட்ச விலகலுடன் வழங்குகின்ற  அதன் இரண்டு எக்ஸ் -பேலன்ஸ்டு ஸ்பீக்கர் யூனிட்கள் அத்துடன் தெளிவான குரல் மற்றும் விரிவாக்கப்பட்ட ஒலி புலத்தை வழங்கும் இரண்டு ட்வீட்டர்கள் மூலம் சிறந்த இசையை அனுபவியுங்கள்.

 

இந்த  எஸ்ஆர்எஸ் – எக்ஸ்வி 500 ஆனது செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக நிலை நிறுத்தப்படுகின்ற அதன் நெகிழ்வுத்தன்மையின் காரணமாக எந்த சூழலுக்கும் மாற்றியமைக்க அனுமதிக்கிறது. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் கொண்டாடுவதற்கு ஆற்றல்  வழங்குகின்ற 25 மணி நேர நீடித்த பேட்டரி ஆயுள் மற்றும் எடுத்துச் செல்லும் வடிவமைப்பு. இந்த  எஸ்ஆர்எஸ் – எக்ஸ்வி 500 ,அதன் நீண்ட பேட்டரி ஆயுள் காரணமாக உங்களை ஒருபோதும் கைவிடாத ஒரு ஸ்பீக்கர் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, இந்த  எஸ்ஆர்எஸ் – எக்ஸ்வி 500 25 மணிநேரம் வரை பிளேபேக் ஐ  வழங்கும். கூடுதலாக, 10 நிமிடங்களின் விரைவாக சார்ஜ் செய்வது, 2.5 மணிநேரம் வரை இயக்க நேரத்தை   நீடிக்கும்.

 

கரோக்கி செயல்பாட்டின் மூலம் உங்களுக்குப் பிடித்த பாடலைப் பாட, கரோக்கி மைக்கைச் இணைத்து, பிளே ஐ அழுத்துங்கள். ஒரு இரண்டாவது உள்ளீடு வழியாக நீங்கள் ஒரு  இரண்டாவது மைக்கில் ஒரு நண்பருடன்  சேர்ந்து பாடலாம் அல்லது செயல்திறனின்  தீவிரத்தை மேலும் அதிகரிக்கக் கிட்டாரை இணைக்கலாம்.  இரண்டு உள்ளீடுகளும் தனிப்பட்ட மிக்ஸிங் ஐக் கொண்டுள்ளன. யூனிட்டின் பின்புற பேனலில் உள்ள எக்கோ மற்றும் கீ கன்ட்ரோல் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒலியை சரிசெய்ய உதவுகிறது. யுஎஸ்பி இணைப்புடன் ப்ளக் இன் செய்து இசையை இயக்கலாம். கூடுதலாக நீங்கள் எஸ்ஆர்எஸ் – எக்ஸ்வி 500 ஐ  பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போன்கள் போன்ற மற்ற சாதனங்களை சார்ஜ் செய்யலாம். எஸ்ஆர்எஸ் – எக்ஸ்வி 500 பார்ட்டி ஸ்பீக்கர் விலை ரூ. 31,990 இல் விற்பனைக்குக் கிடைக்கும்.