எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா 

காரமடை எஸ்.வி.ஜி.வி. பள்ளியில்  “மழலையர் பட்டமளிப்பு விழா”  2024  அண்மையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக ஜன்னத்துல் பஷீரா, எஸ்விஜிவி பள்ளியின் முன்னாள் மாணவர் (2008 முதல் 2010 வரை) கலந்து கொண்டார். அவர் பேசுகையில், பெண்களின் ஆரோக்கியத்திற்காகவும்  முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு வழிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

இந்நாளின் சிறப்பம்சமாக மழலைகள் தங்களின் நடனத்திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் கும்மி நடனம் மற்றும் பல்வேறு விதமான நடனங்கள் காண்போரைத் திகைக்க வைத்தது.

இதில் பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி,  தலைமையாசிரியர் சசிகலா, செயலாளர் ராஜேந்திரன், அறங்காவலர் தாரகேஷ்வரி அவர்களும் நிர்வாக அதிகாரி சிவ சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.