இந்துஸ்தான் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

இந்துஸ்தான் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் டெய்லர் பல்கலைக்கழகம், கோலாலம்பூர், மலேசியாவுடன் இணைந்து சர்வதேச கருத்தரங்கம் TESS-2023- “டிரான்ஸ்போர்மிங் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் பார் சஸ்டைனபிலிட்டி” என்ற தலைப்பில் நடைபெற்றது.

நிலைத்தன்மைக்கான பொறியியல் அமைப்புகளை மாற்றுவதற்கான சர்வதேச மாநாட்டின் (TESS-2023) நோக்கம், உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் தங்கள் நிபுணத்துவம், திறமைகள் மற்றும் புதுமையான யோசனைகளை வெளிப்படுத்த இந்த கருத்தரங்கம் வழி காட்டுகிறது.

கருத்தரங்கில் மலேசிய டெய்லர் பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் சிம் யீ வையின் வரவேற்புரை வழங்கினார்.

சர்வதேச மற்றும் தேசிய அளவில் இருந்து ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என 750 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் பெறப்பட்டன. இதில் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை தேர்வுசெய்து, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தனர்.

இதனை தொடர்ந்து, மலேசியாவில் உள்ள முன்னணி சர்வதேச பல்கலைக்கழகங்களான மல்டிமீடியா பல்கலைக்கழகம், ஏஐஎம்எஸ்டி பல்கலைக்கழகம் (பினாங்) மற்றும் சைபர்ஜெயா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இது மாணவர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்களின் தொழில்நுட்ப பரிமாற்றம், செயற்கை நுண்ணறிவு, ஐஓடி, எலக்ட்ரிக் வாகனம், வயர்லெஸ் கம்யூனிகேஷன், ட்ரோன் தொழில்நுட்பம், ரோபோடிஸ் (இயந்திர மனிதன்) வடிவமைப்பு போன்ற சமீபத்திய மேம்பட்ட தொழில்நுட்பத்தின் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள வழிவகை செய்கிறது.

இந்துஸ்தான் கல்வி நிறுவங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன் மற்றும் இணை செயலாளர் பிரியா சர்வதேச மாநாட்டில் நேரிடையாக கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்லுரி நிர்வாகம் சார்பாக நிதி உதவி வழங்கி ஊக்கப்படுத்தினர். மேலும், இதில் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், கல்லூரி முதல்வர்கள் ஜெயா முதல்வர் மற்றும் நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.