கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில்.. படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ‘வர்ணம் 2024’

கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், வர்ணம் 2024 எனும் படைப்பாற்றல் மற்றும் அறிவுத்திறன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கல்லூரியின் முதல்வர் மணிமாறன் துவக்கி வைத்தார். மேலும், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். வர்ணம் 2024 வண்ணங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நிறைந்ததாக இருந்தது, கொண்டாட்டத்தில் பங்கேற்க பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் குவிந்ததால் வளாகம் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் தொழில்நுட்ப கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் மேலும் பல்வேறு தொழில்நுட்ப போட்டிகளில் பங்கேற்றனர். இந்த விழாவில் பின்னணிப் பாடகர்கள் பிரசன்னா மற்றும் பூஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியானது மாணவர்கள் தங்களது படைப்பு மற்றும் கலை திறனை வெளிப்படுத்த ஒரு சிறந்த தளமாகவும் அமைந்தது. இதில் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த வர்ணம் நிகழ்ச்சியானது வளாகம் முழுவதும் மகிழ்ச்சி மற்றும் தோழமை சுழலை எதிரொலிக்க செய்தது. கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் மணிமாறன், வர்ணம் 2024ஐ மாபெரும் வெற்றியடையச் செய்த அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.


கல்லூரி முதல்வர் பேசுகையில், ‘வர்ணம் 2024 திறமை, படைப்பாற்றல் மற்றும்ஒற்றுமையின் கொண்டாட்டமாக உள்ளது. இந்நிகழ்ச்சி முழுவதும் எங்கள் மாணவர்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்திற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்களின் உற்சாகம் எங்கள் கல்லூரியின் உணர்வை உண்மையிலேயே உயர்த்தியுள்ளது என்று குறிப்பிட்டார்.
நிகழ்வு முடிவுக்கு வந்திருக்கலாம், ஆனால் இந்நிகழ்ச்சியின் தாக்கம், எதிர்கால தலைமுறை மாணவர்களை கனவு காணவும், புதுமைகள் செய்யவும் சமூகத்தில் சிறந்து விளங்கவும் ஒரு தூண்டுகோலாக அமையும். வர்ணம் 2024, கல்லூரி மாணவர்களிடையே ஓர் அழியாத முத்திரையை பதித்துள்ள நிலையில், கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரி, திறமை, படைப்பாற்றல் மற்றும் இளைஞர்களின் துடிப்பான உணர்வைக் கொண்டாடும் இதுபோன்ற இன்னும் பல நிகழ்வுகளை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறது.