என்.ஜி.பி கல்லூரியில் 16வது விளையாட்டு விழா

டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் 16வது விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் கல்லூரி தலைவர்  நல்ல ஜி பழனிசாமி கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில்  என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு  நடைபெற்றது.

மேலும் இதில் கல்லூரியின் செயலாளர் தவமணி பழனிசாமி, கோவை மருத்துவ மையம் ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி புவனேஸ்வரன், கல்லூரி முதல்வர் பிரபா, பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.