பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தலைவராக மீனா சுவாமிநாதன் தேர்வு

பிக்கி புளோ மகளிர் அமைப்பின் 2024-25ம் ஆண்டுக்கான புதிய தலைவராக மீனா சுவாமிநாதன் தேர்வாகியுள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் மகளிர் அமைப்பான பிக்கி புளோ, பெண்களின் முன்னேற்றத்துக்காக 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறது .

கோவை கிளையின் ஆண்டு கூட்டம் அண்மையில்  நடந்தது. நிகழ்ச்சியில், 2023 -24க்கான தலைவரும் கங்கா மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை பிரைவேட் லிமிடெட் இயக்குநருமான ரமா ராஜசேகர், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை, புதியதாக 2024- 25ம் ஆண்டுக்குத் தலைவராகத் தேர்வாகியுள்ள அஸ்ட்ரால் பிஸினஸ் கன்சல்டிங் எல்எல்பி,யின் ஆடிட்டர், முதுநிலை பங்குதாரருமான மீனா சுவாமிநாதனிடம் ஒப்படைத்தார்.

மீனா சுவாமிநாதன், 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்தவர். தகவல் தொழில்நுட்பம், இ.ஆர்.பி., அமைப்பில் திட்டமிடல், செயலாக்கம், தணிக்கை போன்றவற்றில் அனுபவம் பெற்றவர். ஐஎஸ்ஏசிஏ கோவை கிளையின் முன்னாள் தலைவராகவும், கோயம்புத்துார் மேலாண்மை சங்கத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார்.

பிக்கி புளோவின் வரம்பிற்கு உட்பட்டு, திட்டங்களையும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ள உள்ளார். தொழிற்சாலை பார்வையிடல், கண்காட்சி நடத்துதல் போன்ற பல செயல்பாடுகளையும் திறம்பட நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.