டாக்டர் என்.ஜி.பி. கல்லூரியில் சொற்பொழிவு நிகழ்வு

டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளங்கோவடிகள் தமிழ்மன்றத்தின் சார்பாக ”கதைகளே வாசிப்பின் திறவுகோல்” என்னும் சிறப்புச் சொற்பொழிவு கல்லூரி வளாகத்தில்  நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாகத் தமிழ்த்துறை பேராசிரியர் கிருஷ்ண ராஜ் வரவேற்றுப் பேசினார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் குப்புசாமி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக ”கதைகளே வாசிப்பின் திறவுகோல்” என்னும் தலைப்பில் ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் சர்மிளா தேவி சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றியும், ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் போன்ற படைப்பாளிகளின் கதைகளின் யதார்த்தப் போக்கினையும் பற்றிக் கூறினார். மேலும்,  கதைகளின் வாயிலாக மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்வியலுக்குத் தேவையான நுட்பமான கருத்துக்களை எடுத்துக் கூறினார்.  ’கற்றல் மிக இனிதே’ என்ற வாசகத்திற்கேற்ப மாணவர்கள் புதிதாகக் கற்றலின் வாயிலாக வாழ்வியல் கருத்துக்களைப் பெற்று வளம் பெற முடியும் என்றார்.