எஸ்.என்.எஸ் பாரா மெடிக்கல் கல்லூரியில் வரவேற்பு விழா

எஸ்.என்.எஸ் பாரா மெடிக்கல் கல்லூரியில் பார்மசி, நர்சிங், பிசியோதெரபி மற்றும் இதர மருத்துவம் சார்ந்த துறை படிப்புகளுக்கான தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, எஸ்.என்.எஸ் கல்வி குழுமங்களின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பங்கேற்று மருத்துவம் சார்ந்த படிப்புகளின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் அயராத சேவைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இதில், எஸ்.என்.எஸ் பாரா மெடிக்கல் கல்லூரியின் முதல்வர் மற்றும் எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் செந்தூர் பாண்டியன் ஆகியோர் பங்கேற்று முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே உரையாற்றினர்.