கே.ஜி. குரூப்பின் டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் “சிக்னேச்சர்சிட்டி” அறிமுகம்

கே.ஜி. குழுமத்தின் ஒரு அங்கமான டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் கட்டுமான நிறுவனம், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு எதிரே சிங்காநல்லூர் காமராஜ் சாலையில் “சிக்னேச்சர் சிட்டி” என்ற புதிய அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கோயம்புத்தூரில் டவுன் & சிட்டி டெவெலபெர்ஸின் பதினான்காவது குடியிருப்புத் திட்டமாகும்.

“சிக்னேச்சர் சிட்டி” தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு வகையான குடியிருப்பு வசதிகளை வழங்குகிறது, இதில் ஸ்டுடியோ குடியிருப்பு ரூ.19.99 லட்சம்*, 1 BHK குடியிருப்பு ரூ. 31.5 லட்சம்*, 2 BHK குடியிருப்பு ரூ. 51.00 லட்சம்*, மற்றும் 3 BHK குடியிருப்பு ரூ. 75 லட்சம்* எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக மையங்கள் போன்ற முக்கிய வசதிகளை எளிதில் அணுகக்கூடிய வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது.

நிகழ்வில், விற்பனை பிரிவு துணை தலைவர் பாலசுந்தர், மூத்த துணைத் தலைவர் சுரேஷ் குமார், மார்க்கெட்டிங் மேலாளர் ஜோஷ்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.