கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெஸ் நிறுவனத்தின் சிறப்பு விற்பனை வியாழக்கிழமை துவக்கியது.

இந்நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் குத்துவிளக்கு ஏற்றி, முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார். இங்கு, பாரம்பரியமிக்க பட்டு ரகங்களான காஞ்சிபுரம், ஆரணி, சேலம், கோவை, திருபுவனம், ராசிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டு ரகங்களுக்கு வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் தற்காலத்திற்கு ஏற்ற புதிய வடிவமைப்புகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையாக கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீகிதம் அரசு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.

இங்கு புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு மற்றும் பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உரைகள் வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், திரைச் சீலைகள், ரெடிமேடு சட்டைகள், சுடிதார் ரகங்கள், குர்தீஸ் வகைகள், பலதரப்பட்ட நவீன பைகள், குல்ட் ரகங்கள், ஆர்கானிக் சேலைகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்கள் என ஏராளமான வகைகள் உள்ளன.

இந்நிகழ்ச்சியில், முதுநிலை மண்டல மேலாளர் நந்தகோபால், ரகம் மற்றும் பகிர்மான முதுநிலை மேலாளர் ஜெகநாதன் மருதம், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் செல்வன் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.