ரூட்ஸ் நிறுவனங்கள் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் வெள்ள நிவாரண உதவிகள்

கோவையில் இயங்கி வரும் ஆட்டோமொபைல்ஸ் உதிரி பாகங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ரூட்ஸ் நிறுவனங்கள் சார்பில், மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவும் வகையில், ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறும் அளவிலான, ரூபாய் பத்து இலட்சம் மதிப்பில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஐந்து கிலோ அரிசி, பருப்பு மற்றும் 14 அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.