இரத்தினம் கலை கல்லூரியில் உலகத் தர நிர்ணய தின விழிப்புணர்வு!

உலகத் தர நிர்ணய தினத்தை முன்னிட்டு இரத்தினம் கலை மற்றம் அறிவியல் கல்லூரியில் இந்திய தரநிலைகள் பணியக (BIS) மன்றம் மற்றும் கோவை கிளையின் இந்திய தர நிர்ணயம் ஆகியோர் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வை அண்மையில் நடத்தின.

நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராகக் கோயமுத்தூர் BIS கிளையின் மூத்த இயக்குநர் கோபிநாத் கலந்துகொண்டார். மேலும், கல்லூரி செயலாளர் மாணிக்கம், கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் சுரேஸ் மற்றும் ஆய்வுத்துறை புலமுதன்மையர் சபரிஸ், BIS கிளப் ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வானது, மக்கள் மத்தியில் பொருட்களின் தர நிர்ணயத்தை அறிந்து கொள்ளுதல் அவசியம் குறித்தும், BIS Care App பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தது.

இதையடுத்து, உலத்தர தினத்தை மையப்படுத்தி வீட்டுக்கு வீடு பிரச்சார செயல்பாடுகள், மாணவர்களின் விழிப்புணர்வு நடனம், நாடகம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு BIS குழுவினர் ரூ.78000 ஊக்குவிப்பு தொகையாக அளித்துள்ளனர்.