தற்கால கணினிப் போக்குகள் குறித்த சர்வதேச கருத்தரங்கு

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி ஆய்வுத் துறைகள் இணைந்து தற்கால கணினிப் போக்குகள் குறித்த சர்வதேச மாநாடு நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக இஸ்ரோவின் தகவல் அமைப்பு மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜீவ் ரத்தன் சேத்வானி, மலேசியாவின் எய்எம்ஸ்ட் (AIMST) பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராமன் ரகுரமணி, அமெரிக்காவின் ஏஐ லேப்எஸ் நிறுவனத்தின் தலைவர் (AI LABS INC) பாஸ்கர் ராவ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.டி. ஓ பென் ஜான் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர்.

இந்நிகழ்வுக்கு வரவேற்புரையினை தரவு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுத் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் அனுராதா வழங்கினார். ஆங்கிலத்துறைப் பேராசிரியர் பிரியா ஷரன் தாமஸ் தலைமையுரையாற்றினார். இக்கருத்தரங்கு வெற்றி பெற கல்லூரியின் தலைவர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இக்கருத்தரங்கில் தொழில்நுட்பம் சார்ந்த பல நிறுவனங்களைச்சார்ந்த  ஆய்வாளர்கள்  ஒன்று கூடித்தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.  பல கல்லூரிகளில் இருந்து  பேராசிரியர்கள் ஆய்வு மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தங்கள் ஆய்வுக் குறித்து கட்டுரை விளக்கினர். தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடு முதல்  தகவல் தொடர்பு நிறுவனங்களின் வேலை  வாய்ப்புகள் வரை பல்வேறு தலைப்புகளில்  விவாதிக்கப்பட்டது.

சிறந்த கருத்துக்கள் மற்றும் சமுகப்பயன்பாடு உடைய தலைப்பு தேர்வு செய்யப்பட்டு விருதுக்கு உரியதாக  அறிவிக்கப்பட்டது. கணினி அறிவியல் மற்றும் அறிவாற்றல் துறை,செயற்கை நுண்ணறிவு துறைகளின் தலைவர் சசிகலா நன்றியுரை வழங்கினர் .