கே. பி. ஆர். கலைக் கல்லூரியில் ‘அறநெறி முதற்றே’ சொற்பொழிவு நிகழ்வு

கே. பி. ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி தமிழ்த்துறை நடத்திய அறநெறி வகுப்பு ‘அறநெறி முதற்றே’ எனும் தலைப்பிலான சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.

இந்நிகழ்விற்குக் கல்லூரியின் முதல்வர் கீதா தலைமை தாங்கினார். தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் தலைவர் அனுராதா வாழ்த்துரை வழங்கினார். உதவிப்பேராசிரியர் கோகுல்நாத் அறிமுகவுரை வழங்கினார். இன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர், நிர்மலா மகளிர் கல்லூரி, உதவிப்பேராசிரியர் சகோதரி கிரேசி கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.

அவர்தம் உரையில் மாணவர்களுக்கு அறம் சார்ந்த அரிய செய்திகளை சங்க இலக்கியங்கள் முதல் கொண்டு எடுத்துரைத்தார். மனித வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிப் பண்புகளின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். வெற்றி வாழ்க்கைக்குத் தேவையான மனிதப்பண்புகள் பற்றி வரலாற்றுச் செய்திகளோடு கூறினார். மாணவர்களின் மன நிலையை சுய ஆய்வு செய்யும் பொருட்டுக் குழு அமைத்து நேர்மறை எண்ணங்கள், எதிர் மறை எண்ணங்கள் குறித்து எழுதக்கூறியும், வாசிக்கச் செய்தும் கலந்துரையாடல் வழி நற்கருத்துகள் பற்றி விவரித்தார்.

மாணவர்களும் தத்தம் மனக்கருத்துக்களைக் கூறி அறநெறிச் சிந்தனைகள் குறித்து அறிந்து கொண்டனர். முதலாம் ஆண்டு வணிகப்பகுப்பாய்வுத்துறை மாணவி செ.வினிஷா அவர்கள் வரவேற்புரையும், முதலாம் ஆண்டு மாணவி வைஷ்ணவி நன்றியுரை வழங்கினர்.