சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் !

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

நோபல் பரிசு பெற்ற இந்திய அறிவியலாளர் சர்.சி.வி இராமன், 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28, அன்று கண்டறிந்த ‘இராமன் விளைவு’ நிகழ்வினைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் இந்நாள் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், இஸ்ரோ விஞ்ஞானியும், எழுத்தாளருமான டாக்டர் நெல்லை முத்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடனான 40 ஆண்டுகால தொடர்பினைத் தனது உரையில் நினைவு கூர்ந்தார். அப்துல்கலாம் எண்ணத்தில் உதித்த இந்தியா 2020 நூலை தமிழில் மொழிபெயர்த்த சமயத்தில், அதனைப் படித்து, அப்துல் கலாம் அவர்கள் பாராட்டியதனைப் பெருமையாகக் கருதுவதாகக் கூறினார். விண்வெளி அறிவியலில் இந்தியாவின் சாதனைகளை மையமாகக் கொண்ட எதிர்கால அறிவியல் என்ற தலைப்பில் மருத்துவத் துறை உட்பட அற்புதமான அறிவியல் உலகம் பற்றிய செய்திகளைக் கூறினார்.

மருத்துவ உலகில் தொடர்ந்து வரும் முன்னேற்றங்கள் இன்னும் மனித மர்மங்களாக இருக்கும் பல நோய்களுக்கு எவ்வாறு பதிலளிக்கும் என்பதைப் பற்றி விளக்கினார். தொடக்கம் கடினமாக இருக்கின்றது என்பதற்காகப் பின்வாங்கிவிடாதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவியர்க்கும் வழங்கிய அறிவுரை. தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். பள்ளியில் தேசிய அறிவியல் தினம் பார்பாக நடத்தப்பட்ட வினாடி-வினா போட்டி, கண்காட்சி மற்றும் அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்குப் புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

முன்னதாக, விழாவிற்கு வந்திருந்தோரைப் பதினொன்றாம் வகுப்பு மாணவி சபிக்க்ஷா வரவேற்றார். மாணவர் என்.எஸ்வந்த் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.