விஐ போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு  இலவச காப்பீடு சலுகை

கோவிட் பெருந்தொற்றுக்குப் பின் தற்போது, இந்தியர்கள்  உலகம் முழுவதும் சுற்றும் சுற்றுலா பயணிகளாக  அதிகரித்து இருக்கிறார்கள்.  சுற்றுலா பயணத்தில் உருவாகி இருக்கும் இந்த மாபெரும் மாற்றம், ஒரு வகையில் நேர்மறையாக இருந்தாலும், மறுபக்கம் தொலைந்து போன மற்றும் தவறாகக் கையாளப்பட்ட தங்களது சாமான்களைப் பற்றிய கவலைகள் அதிகரித்து வருவது நாளுக்குநாள் அதிகமாகி வருகின்றன.

உண்மையில், விமான நிலைய போக்குவரத்து தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் SITA -ன் அறிக்கை, 2022-ல் பயணிகள் தங்களுடன் தூக்கி வந்த சாமான்களில்  26 மில்லியனுக்கும் அதிகமான சாமான்கள் தாமதமாக வந்தடைந்து இருக்கின்றன, அல்லது காணாமல் தொலைந்து போயிருக்கின்றன அல்லது சேதமடைந்து இருக்கின்றன என்று தெரிவித்து இருக்கிறது.இதனால் சுற்றுலா செல்பவர்களின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கு, அவர்கள் தங்களுடன் தூக்கிச்செல்லும் உடைமைகளை திறம்பட கையாள ’உடைமை மேலாண்மை’ அதிக அக்கறை செலுத்த வேண்டிய அம்சமாகி இருக்கிறது.

இதனால் சுற்றுலா செல்லும்  பயணிகளின் சாமான்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்கான தீர்வுகளை முன்னெடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகையில், முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான விஐ அமெரிக்காவை அடிப்படையாக கொண்டு செயல்படும், தொலைந்து போன சாமான்களுக்கு காப்பு அளிக்கும் சேவை நிறுவனமான ப்ளூ ரிப்பன் பேக்ஸ் உடன் இணைந்து செயல்படவுள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு துறையில் முதல் முறையாக இச்சேவையை விஐ வழங்குவது குறிப்பிடத்தக்கது.  இச்சலுகையின் மூலம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் விஐ போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள்  இனி கவலை இல்லாமல் தங்களது சுற்றுலாவை கொண்டாடி மகிழலாம். விஐ போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள், ஏப்ரல் 7, 2024-க்கு முன் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணத்திற்காக சர்வதேச ரோமிங் பேக்கை முன்பதிவு செய்து, தாமதமான அல்லது தொலைந்து போன சாமான்களுக்கு இலவசக் காப்பீட்டைப் பெறலாம்.

தங்களது உடைமை குறித்த புகாரைச் சமர்ப்பித்த பிறகு 96 மணிநேரத்திற்கு மேல் சாமான்கள் கிடைக்க தாமதமாகினாலோ அல்லது கண்டுபிடிக்கப்படாமலோ இருந்தால், உடைமைகள் உள்ள பெட்டி ஒன்றுக்கு ரூ.19,800 வரை காப்பீட்டு இழப்பு  வழங்கப்படும். இந்த பிரத்தியேக சலுகையானது தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச ரோமிங் பேக்குகளுக்கு  மட்டும் குறிப்பிட்ட காலம் வரை  மட்டுமே பொருந்தும்.

10 நாட்கள் ரூ.3999,14 நாட்கள் ரூ.4999, மற்றும் 30-நாட்கள் ரூ.5999 ஆகிய குறிப்பிட்ட அன்லிமிடெட் சர்வதேச ரோமிங் திட்டங்களுக்கு, பிப்ரவரி 26, 2024 முதல் மார்ச் 21, 2024 வரை மேற்கொள்ளும் சர்வதேச பயணங்களுக்கு மட்டும் பொருந்தும்.