விவசாயிகளின் முன்னேற்ற பங்களிப்பில் ‘பாராசூட் கல்பவிருக்க்ஷா’

மாரிகோ லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை முயற்சியான பாராசூட் கல்பவிருக்க்ஷா அறக்கட்டளை, இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு முன்னேற்றம் அளிப்பதில் குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுக்கின்றது.

இந்த அறக்கட்டளை விவசாயிகளுக்கு அத்தியாவசிய கருவிகள், நுண்ணறிவு மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளுக்கான தெளிவைவழங்குகிறது. தொடக்கத்திலிருந்து, பாராசூட்கல்பவிருக்க்ஷா அறக்கட்டளை விவசாயிகளிடையே தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும், நவீன மற்றும் நீடிப்புத்திறனுடைய விவசாய நுட்பங்களை வலியுறுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது. பயிற்சி, நீடிப்புத்திறனுடையமுயற்சிகள் மற்றும் டிஜிட்டல் நுண்ணறிவுஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான அணுகுமுறை மூலம், இந்த அறக்கட்டளை 3,11,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களில் 81,000-க்கும் மேற்பட்ட இந்திய விவசாயிகளுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது பயிர் விளைச்சலில் 16% அதிகரிப்பை கண்டுள்ளனர், இது விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் திட்டத்தின் செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது.

பாராசூட் கல்பவிருக்க்ஷா அறக்கட்டளை, விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களை சமாளிக்கும் நோக்கத்துடன், பொள்ளாச்சியில் மூன்று முக்கிய பிரச்சினைகளை அடையாளம் கண்டு இலக்கு தீர்வுகளை உருவாக்கியது. பண்ணை உற்பத்தியை அதிகரிக்க, பாராசூட்கல்பவிருக்க்ஷாஅறக்கட்டளை நீர் சேமிப்பு, விஞ்ஞான மற்றும் நீடித்துநிற்கும்விவசாய முறைகள் குறித்து விவசாயிகளுக்கு கல்வி கற்பிப்பதில் கவனம் செலுத்தும் முயற்சிகளைத் தொடங்கியது. உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு ஒரு விரிவான திட்டத்தை பாராசூட்கல்பவிருக்க்ஷாஅறக்கட்டளைசெயல்படுத்தியது. பூச்சி மேலாண்மை, நோய் கட்டுப்பாடு, ஊட்டச்சத்து குறைபாடுகள்மேலாண்மைமற்றும் நீர் மேலாண்மை போன்ற நடைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு கல்வி கற்பிக்க 120 க்கும் மேற்பட்ட களப்பணியாளர்களை நியமித்தது. இந்த முயற்சி மாதந்தோறும் 30,000 விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மூலம் பயனளிக்கிறது.

அமித் பாசின், தலைமை சட்ட அதிகாரி & குழு பொது ஆலோசகர் மற்றும் மாரிகோ லிமிடெட் சி.எஸ்.ஆர் குழுவின் செயலாளர், “அறக்கட்டளையின் வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில், “பாராசூட் கல்பவிருக்க்ஷா அறக்கட்டளையானது, நீடித்த விவசாயம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான மேரிகோவின் அர்ப்பணிப்பை உள்ளடக்கியது, இதனால் விவசாயிகளின் வாழ்வில் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நிலையான விவசாய நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், விவசாயிகளுக்கு விரிவான ஆதரவை வழங்குவதன் மூலமும், பொள்ளாச்சியிலும் நாட்டின் பிறபகுதிகளிலும் ஒரு நேர்மறையான மாற்றத்தைஏற்படுத்துவதோடு, நெகிழக்கூடிய விவசாய சமூகத்தை வளர்ப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளோம்…”.

இந்த நிதியாண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் 15 மாவட்டங்களில் 3000 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் 40-க்கும் மேற்பட்ட பயிற்சி அமர்வுகளை நடத்தியுள்ளது. இந்த முயற்சி விவசாயிகள் தங்கள் விவசாய நுட்பங்களை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வல்லமை அளிக்கிறது. நேரடி பயிற்சி அமர்வுகளைத் தவிர, இந்த திட்டம் விவசாயிகளை சென்றடைய ஒரு சிறப்பு செயலி, வலைத்தளம், கட்டணமில்லா விவசாயி ஹெல்ப்லைன் மற்றும் சமூக ஊடக தளம் போன்ற டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துகிறது. 1.9 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைக்கொண்ட இந்த செயலி, விவசாயிகள் பயனுள்ள விவசாய நடைமுறைகளைப் பின்பற்ற உதவுகிறது, அதே நேரத்தில் கட்டணமில்லா ஹெல்ப்லைன் விவசாயிகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட உதவிகளை வழங்குகிறது, பூச்சி மேலாண்மை, ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் பிற விவசாய பிரச்சினைகள் குறித்த அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது.