சுமங்கலி ஜுவல்லர்ஸின் 3வது புதிய கிளை திறப்பு

கோவை கிராஸ் கட் ரோட்டில், சுமங்கலி ஜுவல்லர்ஸின் 3வது புதிய கிளை  திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இக்கிளையை சுமங்கலி ஜூவல்லர்ஸின் உரிமையாளர் விஸ்வநாதன் மற்றும் கிரிஜா விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.

திறப்பு விழா சலுகையாகத் தங்க நகைகளுக்கு சேதாரத்தில் 25% தள்ளுபடியும், வைரம் கேரட்டிற்கு ரூ.15,000ம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

கிளை திறப்பு விழாவில் சுமங்கலி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர்கள் செந்தில், அஸ்யந்த், இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் தாளாளர் சரஸ்வதி கண்ணையன், இணைச் செயலர் பிரியா, அனன்யாஸ் குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். 1979 ஆண்டு நிறுவப்பட்ட சுமங்கலி ஜூவல்லரி நிறுவனம், தற்போது காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் தனது  3வது புதிய கிளையை தொடங்கியுள்ளது.