உலகத் தாய்மொழி தினம்: இந்துஸ்தான் கல்லூரியில் வாசிப்பு முற்றம்

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகத்தாய்மொழி தினத்தை முன்னிட்டு  மொழித்துறையின் வாசிப்பு முற்றம் எனும் தலைப்பில் நிகழ்வு நடைபெற்றது.

விழாவிற்கு  முதல்வர் பொன்னுசாமி வாழ்த்துரை வழங்கினார். மொழித் துறைத் தலைவர் காயத்ரி வரவேற்புரை வழங்கினார்.

தொடர்ந்து, செம்மொழியான தமிழ்மொழியாம் பாடலுக்கு நடனமும், தமிழ் மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில்  கவிதைகளை எழுதி 20 மேற்பட்ட மாணவர்கள் வாசித்தனர்.

தாய் மொழியின் அவசியம்  குறித்த நாடகம் நிகழ்த்தப்பட்டது. தமிழ், மலையாளம் கன்னடம் தெலுங்கு படுகா, அரபி, உருது, பிரெஞ்சு, சைனிஸ்  உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை முப்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடினார்.

மொழியின் மீது தாங்கள் கொண்டுள்ள பற்றினை கட்டுரைகளாக வாசித்தனர். நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.