கே.பி.ஆர். கல்லூரியில் அடல் ஆசிரிய மேம்பாட்டு நிகழ்வு 

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் நிதியுதவியுடன் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை “குறைக்கடத்தி அமைப்பின்  வடிவமைப்பு மற்றும் சோதனை முறைகளின் சமீபத்திய போக்குகள்” என்ற தலைப்பில் அடல் ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சியை நடத்தியது.

இதில் ஐஐடி, என்ஐடி பேராசிரியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பங்கேற்று மறுகட்டமைக்கக் கூடிய வன்பொருள் கட்டமைப்பு, காம்பாக்ட் மாடலிங், மற்றும் குறைந்த சக்தி கொண்ட வி.எல்.எஸ்.ஐ மின்சுற்று வடிவமைப்பு ஆகிய தலைப்புகளில் பேசினர்.

நிகழ்வின் ஒரு பகுதியாக வி.வி.டி.என் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்குக் களப்பயணம் மேற்கொண்டு சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பார்வையிட்டனர்.

இதில் 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், முதுகலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் பங்கேற்று தங்கள் அனுபவங்களையும் நுண்ணறிவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.