இரத்தினம் கல்லூரியில் ஊடகவியல் பயிலரங்கம்

கோவை இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி  காட்சி தொடர்பியல் துறை , இரத்தினவாணி சமுதாய வானொலி, மக்கள் ஊடக மையம், அருகு அறக்கட்டளை சார்பில் ஊடகவியல் பயிலரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் புதிய தலைமுறை, வின் தொலைக்காட்சி முன்னாள் முதன்மை செய்தி ஆசிரியர் ராமசுப்பிரமணியம், ஊடகவியலாளர்  “நம்மால் முடியும்” சித்ரவேல், இரத்தினவாணி சமுதாய வானொலி நிலைய இயக்குனர் மகேந்திரன், ஆடை வடிவமைப்பு துறைத் தலைவர் உதவிப் பேராசிரியர் தான்வி , முன்னாள் தொடக்கக் கல்வி அலுவலர் தனலட்சுமி, அருகு அறக்கட்டளை நிறுவனர் விக்கிரம பூபதி , மெகா பவுண்டேஷன் காளிதாஸ், தாய் தமிழ் அகாடமி நிறுவனர் பால்ராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிராமப்புற மாணவர்கள் இளைஞர்களுக்கு பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகத்துறையில் எப்படி திறன் பட பணியாற்றுவது, ஊடகத்துறையில் சாதிப்பது, ஊடகத்துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகள் பற்றி இந்த ஊடக பயிலரங்கத்தில் பயிற்றுவிக்கப்பட்டது. இப்பயிலரங்கத்தில் கிராமப்புற மாணவர்கள்மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.