தி.மு.க. வின் பரப்புரை கூட்டம்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. வினர் “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!” எனும் தலைப்பில் பரப்புரை மாநாட்டை பீளமேடு கொடீசியா மைதானத்தில் நடத்தினர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார். இதில் கோயமுத்தூர் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ ex.எம்எல்ஏ., வடக்கு மாவட்டச் செயலாளர் ரவி, தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ., உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.