UPI இல் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா இனி கவலை வேண்டாம்

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் கையில் காசு வைத்துக்கொண்டு செலவு பண்ணும் பழக்கமே மக்களிடம் இருந்து குறைந்து வருகிறது. 10 ரூபாய்க்கு செலவு செய்தாலும் டிஜிட்டல் வங்கி மூலம்  பணம் அனுப்பும் காலம் தான் இது. இந்த கால கட்டத்தில் கார்டுகளுக்கு கூட வேலை இல்லாமல் போய்விட்டது.

எல்லாவற்றிற்கும் QR கோடுகளை ஸ்கேன் செய்தோ மொபைல் எண் உள்ளிட்டோ மூலம் தான்

அனுப்பிவிடுக்கிறோம். சில நேரங்களில் தவறுகள் நடக்கவிடும் அவசர அவசரமாக பணம் அனுப்பும்போது .சில சமயம் தவறுகள் நடந்துவிடும்.

ஒரு கணக்கிற்கு பதிலாக வேறு ஒருவர் கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டால் இனிமேல் அதை நினைத்து பயப்பிட வேணடும்.

அதை எப்படி திரும்ப வாங்குவது என்று போராடுவோம். சிறிய தொகையாக இருந்தால் சிலர் அப்படியே விட்டுவிடுவார்கள். அதுவே பெரிய தொகையாக இருந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் அல்லோலப்படுவார்கள். அதற்கான வழியை சொல்கிறோம் கேளுங்கள்.

Paytm, GPay, PhonePe என்று எந்த UPI ஆப்களிலிருந்து நீங்கள் தவறாக பணம் செலுத்தியிருந்தாலும், உடனே அதன் வாடிக்கையாளர் சேவைக்குச் சென்று புகார் செய்ய வேண்டும்.

அதே நேரத்தில், உங்கள் வங்கியின் ஹெல்ப்லைன் எண்ணை அழைத்து புகாரைப் பதிவு செய்யலாம்.

அதோடு மற்றொரு புகாரையும் அளிக்க வேண்டும். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் NPCI இன் வெப்சைட்டிற்கு சென்று அதில் மேலே உள்ள தரவுகளில் What we do என்ற தெரிவை சொடுக்கினால் அதில் அனைத்து UPI பெயர்களும் வரிசையாக பட்டியலிடப் பட்டிருக்கும்.

அதில் நீங்கள் பயன்படுத்திய கணக்கை தெரிவு செய்தால் அதில்  தகராறு நிவர்த்தி பொறிமுறைக்கு (Dispute Redressal Mechanism) செல்ல வேண்டும். இதற்கு நீங்கள் https://www.npci.org.in/what-we-do/upi/dispute-redressal-mechanism ஐயும் கிளிக் செய்யலாம்.

இங்கே பரிவர்த்தனை தாவல் என்று ஒரு தாவலைக் காண்பீர்கள்.  அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்பவும்: பரிவர்த்தனை குறித்த சில விவரங்களான பரிவர்த்தனை தன்மை, சிக்கல், ட்ரான்ஸாக்ஷன் ஐடி, வங்கி பெயர், தொகை, பரிவர்த்தனை தேதி, ஈமெயில் ஐடி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்கள் இதில் அடங்கும்.

இதை நிரப்பியபின் சிக்கல் பதிவு செய்யப்பட்டு விரைவாக தீர்க்கப்படும். தவறாக அனுப்பிய பணமும் திரும்ப கணக்கிற்கு வந்து சேரும்.

RBI வழிகாட்டுதல்: RBI வழிகாட்டுதல்களின்படி, நீங்கள் தவறுதலாக வேறொரு அக்கவுண்டிற்கு பணம் அனுப்பியிருந்தாலும், bankingombudsman.rbi.org.in என்ற வெப்சைட்டிற்குச் சென்று புகார் செய்யலாம்.  இது சிறிது நேரம் எடுக்கும் ஆனால் உங்கள் பணம் திருப்பி அளிக்கப்படும்.