மோடிக்கு எதிரான சர்ச்சை கருத்து; மாலத்தீவு தூதருக்கு ‘சம்மன்’

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில், சமூக ஊடகத்தில் சர்ச்சை கருத்து வெளியிட்ட விவகாரம் தொடர்பாக மாலத்தீவு தூதருக்கு இந்திய அரசிடம் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

லட்சத்தீவு பயணத்தின் போது பிரதமர் மோடி, தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இதனை விமர்சிக்கும் விதமான மாலத்தீவின் ஆளும் பி.பி.எம். கட்சியின் கழக உறுப்பினரான ஜாஹித் ரமீஸ் வன்முறை பதிவு வெளியிட்டிருந்தார். இதற்கு, பாலிவுட் நடிகர்கள், இந்திய மக்கள் என அனைத்து தரப்பிலும் இருந்து கண்டனங்கள் வலுத்தன. இதை தொடர்ந்து, இந்தியர்கள் பலர் தங்கள் மாலத்தீவு பயணத்தையும் ரத்து செய்தனர். இதனையடுத்து, அந்நாட்டு மந்திரிகளான மரியம் ஷியுனா, மல்ஷா ஷரீப், மஜ்ஜூம் மஜித் ஆகிய மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், விவகாரம் குறித்த விளக்கம் அளிக்க வேண்டும் என இந்தியா சார்பில் அந்நாட்டுத் தூதருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மாலத்தீவின் அதிபராக முகமது மிஜ்ஜூ பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அந்நாட்டு கொண்டுள்ளது என்பது கூப்பிடத்தக்கது.