இந்துஸ்தான் கல்லூரியில் சர்வதேச வணிகவியல் கருத்தரங்கு 

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் “கிரிஸ்டல் 2024” என்னும் தலைப்பில் செயற்கை நுண்ணறிவு மூலம் நிலையான வர்த்தகம் செய்தல் குறித்த சர்வதேசக் கருத்தரங்கு நடைபெற்றது.

நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாகக் கர்நாடகா ஜெ.எஸ்.எஸ். அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மஞ்சுநாத் ஆராத்யா, கொச்சி அமிர்தா விஷ்வ வித்யா பீடத்தின் இணைப்பேராசிரியர் மற்றும் துணை முதல்வர் பாலசுப்ரமணியன், அமெரிக்கா எண்டர்பிரைஸ் டேட்டா ஆர்கிடெக்ட் ராஜு ஜெகநாதன், கண்ணூர் பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியர் ஶ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள், மாணவர்கள் என 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தமது கட்டுரைகளை வழங்கினர்.

சிறந்த கட்டுரைகளுக்கு சான்றிதழ், பரிசுத்தொகை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் செயலர் சரஸ்வதி கண்ணையன்,  நிர்வாகச் செயலர் பிரியா  முதல்வர் பொன்னுசாமி, வணிகவியல் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறைத் தலைவர்  லோகநாதன், மற்றும் பல்துறைப் பேராசிரியர்களும் மாணவர்களும்  கலந்துகொண்டு பயன் பெற்றனர்.