சூலூர் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் 3 அதிநவீன மருத்துவ வசதி பிரிவு திறப்பு 

சூலூர் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் இதய அடைப்பை சீராகும் கேத்லேப், எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு(NICU) ஆகிய மூன்று அதிநவீன மருத்துவ வசதிகள் பிரிவு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.

இதில், கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி, துணைத் தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி மற்றும் நிர்வாக இயக்குநர் அருண் பழனிசாமி மற்றும் கோவை மாவட்ட திமுக முக்கிய பிரமுகர்கள், கோவை மருத்துவமனை டீன் நிர்மலா, பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.