மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு 

கோவை வடக்கு மண்டலம் வார்டு எண்.27க்குட்பட்ட பீளமேடு, லால்பகதூர் காலணி, கோபால் நகரில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் (TURIP 2023-24) ரூ.13.33 இலட்சம் மதிப்பீட்டில் 334 மீட்டர் தொலைவிற்குத் தார்ச் சாலைப் பணி நடைபெற்று வருகிறது.

இதனை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், மாநகரப் பொறியாளர் முருகேசன், உதவி ஆணையர் (பொ) எழில், உதவிப் பொறியாளர் திருமூர்த்தி ஆகியோர் இருந்தனர்.