டொயோட்டாவின் புதிய மாடல் டொயோட்டா ரூமியன் கார் அறிமுகம்

டொயோட்டா ரூமியன் காரின் புதிய மாடல் மற்றும் இ-சிஎன்ஜி காருக்கான முன்பதிவு மற்றும் அதற்கான விலை ஆகியவற்றை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த புதிய அறிமுகம் குறித்து டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் சபரி மனோகர் கூறுகையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூமியன் ஜி-ஏடி போதிய இட வசதியுடன், சிறந்த எரிபொருள் திறன், ஸ்டைலான மற்றும் பிரீமியம் வெளிப்புற வடிவமைப்பு ஆகியவற்றுடன் வெளிவந்துள்ளது.இந்த காருக்கான எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.13 லட்சம் ஆகும். இதன் டெலிவரி வரும் 5-ந்தேதி முதல் துவங்க இருப்பதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாயை அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் அல்லது ஆன்லைனில் செலுத்தி இந்த காரை முன் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் டொயோட்டா கூறியுள்ளது.

சிஎன்ஜி மாடலைப் பொறுத்தவரை 64.6 கிலோவாட்ஸ் @5500 ஆர்பிஎம் மற்றும் 121.5 என்எம் @4200 ஆர்பிஎம் முறுக்குவிசையைக் கொண்டுள்ளது. டொயோட்டா ரூமியன் நியோ டிரைவ் மேனுவல் கியர் எஸ், ஜி மற்றும் வி என 7 வித மாடல்களில் கிடைக்கிறது.  நியோ டிரைவ் ஆட்டோமேட்டிக் கியரைப் பொறுத்தவரை எஸ், ஜி மற்றும் வி ஆகிய மாடல்களில் கிடைக்கிறது. இ-சிஎன்ஜியைப் பொறுத்தவரை எஸ் மாடலில் கிடைக்கிறது.

டொயோட்டா ஐ-கனெக்ட் தொழில்நுட்பத்துடன் பல்வேறு சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த காரில் உரிமையாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக முன்புறத்தில் இரட்டை ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பிரேக்போர்ஸ் டிஸ்ரிபியூஷன் உடன் கூடிய பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஹோல்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களும் உள்ளது. என்றும் அவர் தெரிவித்தார்.