குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா துவங்கியது.

கல்லூரி வளாகத்தில் உள்ள ராமானந்த அடிகளார் கலையரங்கில் இரு நாட்கள் (ஜனவரி 20, 21) நடைபெறும் இவ்விழாவின் முதல் நாளில், சிறப்பு விருந்தினர் காக்னிசன்ட் நிறுவனத் தலைவர், நிர்வாக இயக்குநர் மற்றும் நாஸ்காம் நிறுவனத் தலைவர் ராஜேஷ் நம்பியார் பேசியதாவது, `இந்த நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 7 சதவிகிதமாக இருக்கும். இந்தியாவில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மிகவும் வலுவாக உள்ளது. இந்தியாவில் பண பரிவர்த்தனைகளில் 46 சதவிகிதம் யு.பி.ஐ வழியாக நடைபெறுகிறது. இந்தியாவையும் அதன் திறனையும் உலகம் அங்கீகரித்து வருகிறது. பொருளாதார நிபுணர்களின் கணிப்புகளின் படி, 2030ல் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மற்றும் ஜப்பானை முந்தி மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்’ என்றார்.

குமரகுரு நிறுவனங்களின் தாளாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். குமரகுரு நிறுவனங்களின் இணைத் தாளாளர் சங்கர் வாணவராயர் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் சரவணன் ஆண்டறிக்கையை வழங்கினார். மொத்தம் 2,௦40 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.