வனவிலங்குகள் நடமாட்டம்: மருதமலை செல்லும் பக்தர்களுக்குக் கட்டுப்பாடு 

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மருதமலை சுற்றுக்கு உட்பட்ட மருதமலை சராகத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் செல்லும் தார் சாலை, படிக்கட்டுகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் (RF) அமைந்துள்ளதால், சிறுத்தைகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் பெரும்பாலான முறை கடந்து செல்கின்றன.

கோவிலுக்குச் சென்று வரும் பக்தர்களின் நடமாட்டத்தினாலும், வாகனங்களின் ஒலிபெருகினாலும் பெரும்பாலும் பகல் நேரங்களில் விலங்குகள் கடந்து செல்வதில்லை. எனினும், வனவிலங்குகள் நடமாட்டத்தை இரவு பகலாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனத்தில் சென்று வர வனத்துறையின் மூலம் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வனவிலங்குகள் நடமாட்டம் குறித்தும் பொது மக்கள் நலன் கருதியும் கோவில் நிர்வாக  துணை கண்காணிப்பாளரிடம் (DC) பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கவும், விழிப்புணர்வு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.