ஹெவி லிப்ட் லாஞ்சரைப் பயன்படுத்தும் ‘இஸ்ரோ’

விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்து வரும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ புதிய முயற்சியில் முன்னெடுத்து இருக்கிறது.

‘ஸ்பேஸ் எக்ஸ்’ என்ற எலான் மஸ்க்கின் நிறுவனத்தின் உதவியுடன், அந்நிறுவனத்தின் ‘ஃபால்கன்-9’ ராக்கெட் மூலம் ‘ஜீசாட்-20’ என்கின்ற செயற்கைக் கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. இது தொடர்பாக ‘நியூ ஸ்பேஸ் இந்தியா’ மற்றும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தமானது கையெழுத்தாக்கி உள்ளது.

ஃபால்கன்-9 ஹெவி லிப்ட் லாஞ்சரைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும். மேலும், ஜீசாட்-20 செயற்கைக்கோள் ஜீசாட்-N2 என மறு பெயரிடப்படும். மேலும் இது தொலைதூர பகுதிகளுக்கு பிராட்பேண்ட் இணையச் சேவையை வழங்கும்.