மார்டின் பவுண்டேஷன் சார்பில் இலவச நீர் மோர் பந்தல்

கோவை மார்டின் பவுண்டேஷன் மற்றும் ரோட்டராக்ட் கிளப் ஆப் மார்டின் ஹோமியோபதி இணைந்து ரோட்டேரியன் லீமா ரோஸ் மார்டினின் தலைமையில் செவ்வாய்கிழமை கோவை கவுண்டர்மில்ஸ் பகுதியில் கோடை வெயிலில் பறவைகளின் தாகம் தீர்க்க 300 இலவச மண் பாண்ட தண்ணீர் கிண்ணங்கள் மற்றும் அவைகளுக்கு உணவு வைக்கும் தானிய கிண்ணங்கள் ஆகியவை பொதுமக்களுக்கும், கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் இலவசமாக வழங்கபட்டது. மேலும், அதே பகுதியில் பொதுமக்களின் நலனுக்காக கடந்த ஒரு மாத காலமாக கோவை மார்டின் பவுண்டேஷன் நிறுவனத்தால் இலவச நீர் மோர் பந்தல் அமைக்கபட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கபட்டு வருகிறது.