இந்துஸ்தான் கல்லூரி சார்பில் விழிப்புணர்வுப் பேரணி

இந்துஸ்தான் நாட்டு நலப்பணித் திட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கோவை மின் பகிர்மான வட்டம் மற்றும்  உயிரி தொழில் நுட்பவியல் துறையின் சுற்றுச்சூழல் இயக்கம் ஆகியோர் இணைந்து மாணவர்களுக்கு இடையேயான மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வுப் பேரணியை நிகழ்த்தினர்.

இப்பேரணியை இந்துஸ்தான் கலை கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி துவக்கி வைத்தார்.  மேலும், நிகழ்விற்குக் கல்லூரியின்  நிர்வாக அறங்காவலர்  சரஸ்வதி கண்ணையன்  கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராகச் சிந்தனை கவிஞர் கவிதாசன் கலந்துகொண்டு மின் சிக்கனம் இக்காலத்தில் எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துரைத்தார்.

இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேற்பார்வை பொறியாளர் நக்கீரன், தலைமைப் பொறியாளர், உதவி செயற்பொறியாளர் நா. சென் ராம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இப்பேரணியில்  கல்லூரி மாணவர்கள் பலரும்,  கோவை மின் பகிர்மான வட்டம் மின் பொறியாளர்களும்  கலந்துகொண்டு பயனடைந்தனர்.