பாஜக -அமமுக கூட்டணி ? பதிலளித்த டிடிவி தினகரன்

அமமுக சார்பில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயல்வீரர் கூட்டம் சின்னியம்பாளையத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமானம் மூலம் கோவையை வந்தடைந்தார். பின்பு தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில்,  ‘வினாச காலே விபரீத புத்தி’  என்பதை போல் அழிய விருப்பவர்கள் தான் அடுத்தவர்களை பார்த்து பேசுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமியை குறிப்பிட்டார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டம் துரியோதனன் கூட்டம். அவர்கள் வீழ்வது உறுதி என்றார்.

தொடர்ந்து, அதிமுக ஒன்றிணைப்பு பற்றி சசிகலா கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை எனவும், பழனிச்சாமி உடன் அமமுக ஒன்றிணைந்து செல்வதற்கு வாய்ப்பில்லை எனவும் கூறினார். மேலும் அமமுக ஓபிஎஸ் நட்பு, அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நல்ல முறையில் தொடர்வதாக தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், பாஜக கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா  என்ற யூகங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. எங்களுடைய நிலைப்பாடுகளை உரிய நேரத்தில் தெரிவிப்போம் என்றார்.