இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்பு

தமிழநாட்டு கோவை குரூப், 2 விமானப்படை என்சிசி சார்பாக தூய்மை இந்தியா நிகழ்ச்சியை விமானப்படை கமாண்டிங் அதிகாரி விங் கமாண்டர் பர்குணன் துவக்கி வைத்தார்.

இதில் இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி இந்துஸ்தான் கலைக்கல்லூரி, பிஎஸ்ஜி கலைக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி , நேரு ஏரோநாட்டிக் கல்லூரி, எஸ்என்எம்வி கலைக்கல்லூரி மற்றும் கே பி ஆர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களும் ஸ்டேன்ஸ் குரூப் பள்ளி மற்றும் கோவை பப்ளிக் ஸ்கூல் மாணவர்கள் உட்பட சுமார் 500 -கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் ஆர்வமுடன் கலந்து கொண்டு குளத்தில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அகற்றினர். மேலும் 50 குழுக்களாக பிரிந்து சுங்கம் முதல் உக்கடம் நோக்கி செல்லும் நடைபாதையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகளை சேகரித்தனர். இவர்கள் மொத்தமாக சுமார் 300 கிலோவுக்கும் மேற்பட்ட குப்பைகளை சேகரித்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மேலும், என்சிசி விமானப்படை மாணவர்கள் மற்றும் இதர அலுவலர்கள் சுற்றுப்புற சுகாதார நன்மைகள் மற்றும் தூய்மை இந்தியா விழிப்புணர்வு அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வழங்கினர். தூய்மைப்பணியில் ஈடுபட்ட மாணவர்களை குரூப் கமாண்டர் கர்னல் சிவராவ் வெகுவாக பாராட்டினார். நிகழ்ச்சியில் தமிழநாட்டு விமானப்படை என்சிசி கமாண்டிங் அதிகாரி பர்குணன், வாரண்ட் ஆபிஸர் சதீஸ், என்சிசி அலுவலர் ஜெய்னுலாப்தீன் (இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி)ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழநாட்டு விமானப்படை என்சிசி பயிற்சியாளர்கள் சுகுமாரன், ரவி மற்றும் விகாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.