படையெடுக்கும் தெருநாய்களால் மக்கள் அவதி

கோவை மாநகரைச் சுற்றியும் பரவலாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

பீளமேடு அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், மதுக்கரை, பூசாரிப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தற்போது அதிக அளவில் தெருநாய்கள் உலா வருவதுடன் தனியாக வருகின்ற பொதுமக்கள், பள்ளி குழந்தைகளைத் துரத்திக் கடிப்பதாகவும், தெரு நாய்களால் அச்சமடையும் வாகன ஓட்டிகள், மண் குவிந்த சாலைகளில் சறுக்கிவிட்டு விழுவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.

இதுமட்டுமல்லாமல், இந்த தெருநாய்கள் நோட்டிலேயே மல ஜலம் கழிப்பதால், சாலைகள் ஆசிங்காமகி, நடந்துசெல்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. மேலும், அந்த அசிங்கத்தை மிதித்துச் செல்ல வேண்டியநிலை ஏற்படுகிறது. சாலையும் அசிங்கமாகி விடுகிறது. மழைக் காலத்தில் தெரு நாய்களின் அட்டகாசம் சுகாதாரக் கேடாகவும் இருக்கிறது. ஆகையால், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை அகற்ற வேண்டியது இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியமாகும்.

தெருநாய்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்கள், அவைகளைத் தத்தெடுத்து வீட்டில் வளர்க்கவும் ஏற்பாடு செய்யலாம். மொத்தத்தில் தெருநாய் தொல்லையிலிருந்து பொது மக்களை விடுவிக்கக் கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாநகர வாசிகள் முன்வைக்கும் கோரிக்கை.