ஊட்டி மலை ரயில் தொடர்ந்து ரத்து

ஊட்டி மலை ரயில் வரும் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்வோர் ஒரு முறையாவது மலை ரயிலில் சென்று வர வேண்டும் என்று ஆசைப்படுவர். மலை முடுக்குகளிலும், வளைந்து நெளிந்து செல்லும் ரயில் பாதையிலும் செல்லும் அனுபவத்திற்காகவே பலர் இந்த ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.

இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. இந்த சூழலில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழைப்பொழிவு காணப்படுவதால், வரும் 13ம் தேதி வரை நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தென்னக ரயில்வேயின் இந்த அறிவிப்பால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.