வானொலி திருக்குறள் வாசிப்பில்  இரத்தினம் கல்லூரி உலக சாதனை 

இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி , இரத்தினவாணி சமுதாய வானொலி 90.8 மற்றும் தமிழ்த் துறை & காட்சி தொடர்பியல் துறை இணைந்து உலக சாதனை நிகழ்ச்சியை அண்மையில் நடத்தினர்.

திருக்குறளில் உள்ள 1330 குறள்களை இடைவேளையின்றி  ஒரே நேரத்தில் 170 பேர் கடந்த திருவள்ளுவர் தினத்தில் இரத்தினவாணி சமுதாய வானொலி நேரலையில் வாசித்து சாதனை படைத்தனர்.

சாதனையாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்குக் கல்லூரி தலைமை செயல் அதிகாரி  மாணிக்கம் தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர்  பலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். ஆய்வுத்துறை புலமுதன்மையர் சபரிஷ், கல்லூரி துணை முதல்வர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் உலக சாதனையாளர் வெங்கடேசன் பங்கேற்று சாதனை படைத்த பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், மாணவர்களுக்குச் சான்றிதழை வழங்கினார்.

இதில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வைக்  காட்சி தொடர்பியல் துறை தலைவர் சதீஷ் ஆனந்தன், இரத்தினவாணி சமுதாய வானொலி நிலை இயக்குநர் மகேந்திரன், தமிழ் துறைத் தலைவர் பரமேஸ்வரி மற்றும் இரத்தினம் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.