ஒருவர் எத்தனை வங்கிக் கணக்கு வைத்திருக்கலாம்?

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளை வைத்திருக்கலாம் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ரூல்ஸ்.

நம் அனைவரிடமுமே வங்கிக் கணக்கு இருக்கும். நிறையப் பேரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருக்கலாம். சம்பளப் பணம் டெபாசிட் செய்வதற்கும், சேமிப்பு – முதலீடு போன்ற பல்வேறு காரணங்களுக்காக வங்கிக் கணக்கை நாம் பயன்படுத்துகிறோம். அரசின் நலத்திட்ட உதவிகளும் இப்போது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன.

வங்கிக் கணக்கு வகைகள்!
சேமிப்பு கணக்கு, நடப்புக் கணக்கு, சம்பள கணக்கு, கூட்டு கணக்கு போன்ற வகைகள் உள்ளது.

வங்கிக் கணக்கிற்கான விதிமுறை! இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, ஒருவர் இந்தியாவில் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். இதற்கு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இருப்பினும், நீங்கள் திறந்திருக்கும் அனைத்து வங்கிக் கணக்குகளிலும் கவனம் செலுத்துவது முக்கியம். இல்லையெனில் அதிக கட்டணங்கள் வங்கிகளால் விதிக்கப்படும்.

இழப்பு ஏற்படும்! நிறைய கணக்குகளை வைத்துக் கொண்டு அவற்றைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் நீண்ட காலத்தில் அந்த கணக்குகள் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவற்றை ஆக்டிவேட் செய்வது கடினம். மிக முக்கியமாக, வங்கிக் கணக்குகளைப் பராமரிப்பதற்கு வங்கிகள் பல்வேறு வகையான கட்டணங்களை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கின்றன.

இதன் மூலம் நீங்கள் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தாமலேயே அதற்கு கட்டணம் செலுத்தும் சுமை ஏற்படும். எனவே தேவைக்கு ஏற்ப வங்கிக் கணக்குகளை வைத்துக் கொள்வதும் அவற்றைப் பயன்படுத்துவதும் நல்லது.